BREAKING NEWS:தூத்துக்குடிக்கு வந்த கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு!

Default Image

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று கமல் சந்தித்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்ற நிலையில் கமல் 20 பேருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இன்று காலை  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரே மாற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான் என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேரில் சென்ற கமல்ஹாசன் காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது, காயமடைந்தவர்களின் உறவினர்கள் கமல்ஹாசனின் கண்ணீர் விட்டுக் கதறியபோது, கமலும் கண் கலங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், யாரையோ திருப்திபடுத்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாகவும், அம்பு எய்தவர்களை கண்டறிய வேண்டும் என்றும் கோரினார்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்