மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையை குறைக்கலாம் : ப.சிதம்பரம்..!
மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் வரை குறைக்கலாம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுட்டுள்ள கருத்தில், கச்சா எண்ணெய் விலை குறைவால், மத்திய அரசுக்கு லிட்டருக்கு 15 ரூபாய் சேமிப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு லிட்டருக்குப் 10 ரூபாய் கூடுதல் வரிவிதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசுக்கு 25 ரூபாய் வரை கூடுதலாக கிடைப்பதாகவும், இது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களுக்குச் செல்ல வேண்டிய பணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க முடியும் என்றும் ஆனால் குறைக்க மாட்டார்கள் என்றும் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.