குமாரசாமிக்காக சிறப்பு வேண்டுதல் வேண்டிய ஆதரவாளர் ..!
மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா மேலூரு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி, ராமகிருஷ்ணகவுடா. எச்.டி. குமாரசாமியின் தீவிர ஆதரவாளரான இவர் குமாரசாமி முதல்வராக இருந்த போது அவரை பற்றி பெருமையாக பேசி வந்தார். அவர் பதவியில் இருந்து விலகிய போது கவலையடைந்தார்.
இதனால் மாநிலத்தில் மீண்டும் எச்.டி. குமாரசாமி முதல்வர் பதவி ஏற்றுக்கொள்ளும் வரை தலைமுடியை வெட்டுவது கிடையாது என உறுதி ஏற்றுக்கொண்டார். கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கே.ஆர்.நகர் தாலுகா சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீயோகநரசிம்மசாமி கோயிலுக்கு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா சாமி தரிசனம் செய்ய வந்த போது ராமகிருஷ்ணகவுடாவை சந்தித்தார்.
அப்போது தலைமுடியை வெட்டிக்கொள்ள தேவகவுடா அறிவுறுத்தினார். ஆனால் ராமகிருஷ்ணாகவுடா எச்.டி. குமாரசாமி முதல்வர் பதவிக்கு வரும் வரை தலைமுடி எடுப்பது கிடையாது என உறுதிப்பட தெரிவித்தார். இவரது உறுதியை பாராட்டி தேவகவுடா தட்டி கொடுத்து சென்றார். இந்நிலையில் கடந்த 11 ஆண்டுகளுக்கு பின் எச்.டி. குமாரசாமி இன்று மறுபடியும் மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றகவுள்ளதால் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட பின் காசிக்கு சென்று மொட்டைபொட முடிவு செய்துள்ளார்