டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு அனுமதி : உச்ச நீதிமன்றம்..!
நகராட்சி பகுதிகளில் 1100 டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் நகர எல்லையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் அவற்றுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படுவதாக வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டது.
இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 1300 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடியது.1300 டாஸ்மாக் கடைகளை மூடும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.