#T20 World Cup 2022: சூப்பர்-12க்கு தகுதி பெற்ற ஜிம்பாப்வே, தொடரிலிருந்து வெளியேறிய ஸ்காட்லாந்து.!
டி-20 உலகக்கோப்பையில், ஸ்காட்லாந்துக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் கடைசி தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதியது.
ஸ்காட்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணியை 132 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக முன்சி 54 ரன்கள் குவித்தார்.
133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில், சிக்கந்தர் ராசா 40 ரன்கள் மற்றும் கேப்டன் எர்வினின்(58 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்து, சூப்பர்-12க்கு கடைசி அணியாகவும், நுழைந்தது.
இதன் மூலம் குரூப் B வில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் சூப்பர்-12 க்கு முன்னேறியுள்ளன.