#T20 World Cup 2022: டாஸ் வென்று ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங்.!
டி-20 உலககோப்பையின் கடைசி தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்று ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதி சுற்று போட்டிகள் அக்-16இல் தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. குரூப் Aவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளும், குரூப் Bவில் அயர்லாந்து அணியும் சூப்பர்-12க்கு தகுதி பெற்றுள்ளன.
தற்போது இன்று நடைபெறும் கடைசி தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி சூப்பர்-12க்கு தகுதி பெறும். இந்த போட்டியில் டாஸ் வென்று ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஸ்காட்லாந்து அணி: ஜார்ஜ் முன்சி, மைக்கேல் ஜோன்ஸ், மேத்யூ கிராஸ்(W), ரிச்சி பெரிங்டன்(C), மைக்கேல் லீஸ்க், கலம் மேக்லியோட், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், ஜோஷ் டேவி, சஃப்யான் ஷெரீப், பிராட் வீல்
ஜிம்பாப்வே அணி: கிரெய்க் எர்வின்(C), ரெஜிஸ் சகாப்வா(W), வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, ரிச்சர்ட் ங்கராவா, டெண்டாய் சதாரா, பிளஸ்ஸிங் முசரபானி