புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சதவீதம் 94.37 % தேர்ச்சி..!
கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதில் மொத்தம் 17 ஆயிரத்து 432 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதாகவும், இதில் 16,450 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்ச்சி சதவீதம் 94.37 % என்றும் இது கடந்த ஆண்டை விட 0.7% அதிகம். மேலும் இந்தாண்டும் மாணவிகளின் தேர்ச்சியே அதிகம் என குறிப்பிட்ட அவர், 100% சதவீத தேர்ச்சியை 157 பள்ளிகள் பெற்றுள்ளதாகவும், இதில் 22 அரசு பள்ளிகளும் அடங்கும் என்றார்.