இன்று கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கிறார் குமாரசாமி!

Default Image

இன்று கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்கிறார்.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரா துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அமைச்சரவையில் யார்,யார் இடம் பெறுவது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் குமாரசாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய பதவியேற்பு விழாவில் தம்முடன் காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கூறினார். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் பதவி ஏற்பார் என்றும், அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22 இடமும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 12 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணு கோபால் கூறியுள்ளார்.

இன்று மாலை 4.30 மணியளவில் பெங்களூரு விதானசவுதா அருகே நடைபெறும் விழாவில் குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார். சோனியா காந்தி, ராகுல்காந்தி, 5 மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

பதவியேற்பு விழா அழைப்பின் பேரில் பெங்களூரு சென்ற தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகரராவை குமாரசாமி வரவேற்றார். இன்று ஐதராபாத்தில் ஆட்சியர்கள் மாநாடு நடைபெற உள்ளதால் தன்னால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலாது என்றும், இதனால் குமாரசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்ததாகவும் சந்திரசேகரராவ் கூறினார்.

இதனிடையே மக்கள் தீர்ப்புக்கு விரோதமாக கூட்டணி ஆட்சியமைக்கப்படுவதைக் கண்டித்து, இன்றைய தினத்தை பாஜக கருப்பு நாளாக அனுசரிக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்