விடியா அரசுக்கு நன்றி – ஜெயக்குமார்
அ.தி.மு.க-வின் பலம் என்ன என்று காட்டுவதற்கும் உதவி செய்த விடியா அரசுக்கு நன்றி என ஜெயக்குமார் ட்வீட்.
நேற்று சென்னையில், இபிஎஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விடியா அரசுக்கு நன்றி… உண்ணாவிரதத்துக்கு அனுமதி கொடுத்திருந்தால், வள்ளுவர் கோட்டத்தில் கூடி எங்க எதிர்ப்பைக் காட்டிட்டு நாங்களே கலைந்து சென்றிருப்போம். ஆனால், ‘தடை விதிக்கிறோம்… கைது செய்கிறோம்…’ என நாடகம் ஆடி, எங்கள் போராட்டத்தைத் தமிழ்நாடு மக்கள் அனைவரிடமும் எடுத்துட்டுப் போனதோடு மட்டுமில்லாம, அ.தி.மு.க-வின் பலம் என்ன என்று காட்டுவதற்கும் உதவி செய்த விடியா அரசுக்கு நன்றி…’ என பதிவிட்டுள்ளார்.
— DJayakumar (@offiofDJ) October 20, 2022