மியான்மர் சிறையில் குண்டுவெடிப்பு.! 3 அதிகாரிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு.!
மியான்மரின் சிறையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 அதிகாரிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர், 18 பேர் காயமடைந்துள்ளனர்.
மியான்மர் நாட்டின் யாங்கூனிலுள்ள, இன்ஸென் சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளைப் பார்க்க வரும் இடத்தில், கைதிகளுக்கு கொன்டு வந்த பார்ஸலை திறந்த போது அதனுள் இருந்த குண்டு வெடித்தது, அங்கு இரண்டு குண்டு வெடிப்புகள் நடந்ததாக “ஜுண்டா” ராணுவ அமைப்பு மேலும் தெரிவித்தது.
மேலும் இந்த குண்டுவெடிப்பில் 3 அதிகாரிகள், 5 பார்வையாளர்கள் சேர்த்து 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மர் நாட்டில் கடந்த ஒருவருடமாகவே கலவரம் நிகழ்ந்து வருகிறது. மேலும் இன்ஸென் சிறைச்சாலையில், 1000க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களில் மியான்மருக்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதர் விக்கி போமன் மற்றும் ஜப்பானிய பத்திரிகையாளர் டோரு குபோடா ஆகியோரும் அடங்குவர்.