புதிய போக்குவரத்து விதிகள் 2022.! ஹாரன் அடித்தால், தவறான தகவல் கொடுத்தால், அம்புலன்சுக்கு வழிவிடாவிட்டால் அபராதங்கள்.!
இந்தியாவில் வாகன போக்குவரத்து அதிகமாகி கொண்டே போகிறது. அதே போல் வாகன விதிகளை மீறி வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க மத்திய அரசு புதிய போக்குவரத்து விதிகளை அறிமுகப்படுத்தியது.
மத்திய அரசு குறிப்பிட்ட வாகன விதிகள் நேர்க்காட்டுதலின்படி, தமிழக போக்குவரத்து காவல்துறை புதிய விதிமுறைகளை இன்று முதல் அறிவித்துள்ளது. அதில் பல்வேறு விதிமுறைகளும், அதற்கான அபராத தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை கிழே பார்க்கலாம்…
- குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது தான் முன்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது உடன் பயணிக்கும் நண்பர்கள் மீதும் இந்த வழக்கு பதியப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாடகை கார், ஆட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொருந்தாது.
- தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம்.
- ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம்.
- இருசக்கர வாகனங்களை பதிவு செய்யாமல் வாகனம் ஓட்டினால், முதல் முறை 500 அபராதமும், அதுவே மீண்டும் தொடர்ந்தால் இரண்டாவது முறை 1500 ரூபாய் அபராதம்.
- போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதனை மீறி சென்றால் முதல் முதலில் 500 ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை 1500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
- தேவையில்லாமல் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஹாரன் அடித்தால் ரூபாய் 2000 அபராதம்.
- வாகனத்தின் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் அபராதம் 500 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்ந்தப்பட்டுள்ளது.
- ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் வாகனம் ஓட்டினால் 10,000 ருபாய் அபராதம் விதிக்கப்படும்.
- பொதுஇடத்தில் தேவையில்லாமல் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனத்தை நிறுத்தி வைத்தால் 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
- வாகன பந்தயத்தில் ஈடுபட்டாலோ, சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டினாலோ 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.