தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

Default Image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் வரும் 23ஆம் தேதி வரை 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு தினமும் தலா 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்பு பேருந்துகள் என 10 ஆயிரத்து 518 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பிற ஊர்களில் இருந்து நாளை முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பி தீபாவளிக்கு பின் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு அக்டோபர் 24 முதல் 26 வரை தீபாவளி பேருந்துகளுடன் 3,062 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகையை மிகவும் பாதுகாப்புடனும், சிரமமின்றியும் கொண்டாட பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் சிரமமின்றி பயணிக்க சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்