ஒருநாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.!
தடை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிக்கப்பட்டனர்.
நேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை சபாநாயகர் வெளியேற சொல்லி உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கைகளை கண்டித்து, சட்டசபையில் அதிமுகவின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக கூறி, இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தனர். அதற்கு இபிஎஸ் தரப்பில் இருந்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
இதனை அடுத்து சென்னை வள்ளுவர் கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டதை மீறி போராட்டம் நடைபெற்றதால், காவல்துறையினர், இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் தற்போது காவல் துறையினர் விடுத்துள்ளனர். மேலும், தனது ஒருநாள் உண்ணாவிரதத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முடித்துக்கொண்டார்.