காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு தான் கட்சியில் உச்சபட்ச அதிகாரம்.! ராகுல்காந்தி கருத்து.!
காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர். ‘என தெரிவித்தார். அவரே கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுப்பார். – காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கருத்து.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 7897 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1072 வாக்குகளே பெற்றார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு, நேரு குடும்பத்தை சாரத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை. புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பலரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து 42வது நாளாக பாரத ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ‘ காங்கிரஸ் தலைவரின் பங்கு குறித்து நான் கருத்து கூற முடியாது. காங்கிரஸ் கட்சி தலைவரின் குறித்து கார்கே (கட்சியின் தலைவர் வேட்பாளர்) கருத்து தெரிவிக்க வேண்டும். எனது பங்கு என்ன என்பதை தலைவர் செயல்பாடு குறித்து அவர் தான் முடிவு செய்வார். காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர். ‘என தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில், ‘ உட்சபட்ச அதிகாரம் அவரிடம் இருக்கிறது என்பதால் அவரே அனைத்து முடிவுகளையும் எடுப்பார். ‘ எனவும், காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தனது வாழ்த்துக்களையும் ராகுல்காந்தி தெரிவித்தார்.