இந்தியா இதனை செய்தால் உலக கோப்பை தொடருக்கு இந்தியாவிற்கு வரமாட்டோம்.! முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பேச்சு!
அனைத்து நாடுகளும், பாகிஸ்தானில் வந்து விளையாடும் போது பிசிசிஐ க்கு என்ன பிரச்சனை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அன்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானில் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஆசியக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானுக்கு செல்லுமா என்று பேசப்பட்டு வந்த நிலையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா செல்லாது என்று பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு பொதுவான இடங்களில் நடந்தால் இந்தியா பங்கேற்கும் என்றும் பாகிஸ்தானில் நடந்தால் இந்தியா பங்கேற்காது என்றும் ஜெய் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அன்வர், அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் வரும் போது இந்தியாவிற்கு என்ன பிரச்சனை என்று பிசிசிஐக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பையில் இந்தியா பங்கேற்காவிட்டால் இந்தியாவில் 2023 இல் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானும் பங்கேற்காது என்று அன்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு பொதுவான இடங்களில் உலகக்கோப்பை தொடர் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் பங்கேற்கும் என்று அன்வர் மேலும் கூறியுள்ளார்.