ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தை ஒடுக்கதிட்டமிட்ட படுகொலை அரங்கேறியது உறுதியாகியுள்ளது! – மநீம
நியாயமான முறையில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மநீம அறிக்கை.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் கடந்த 3 வருடமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மநீம, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், தனது இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தை ஒடுக்க, திட்டமிட்டப் படுகொலை அரங்கேறியது இந்த விசாரணை அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அப்பட்டமாக விதிமீறல் நடந்துள்ளது. முட்டிக்கு கீழே சுட வேண்டிய போலீஸார், எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல், கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளனர். இறந்தவர்களின் தலை, முதுகு, மார்புப் பகுதிகளில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.
நியாயமான முறையில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் காரணமானவர்கள் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளவர்கள் மீது பாரபட்சமின்றி, கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தாக்கல்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தை ஒடுக்கதிட்டமிட்ட படுகொலை அரங்கேறியது உறுதியாகியுள்ளது!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம்.
துணைத் தலைவர் @MouryaMNM அறிக்கை. pic.twitter.com/AxkYxYdAsa— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) October 18, 2022