T20 World Cup 2022: 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி.!

Default Image

டி-20 உலகக்கோப்பை தொடரின் 5 ஆவது போட்டியில், நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டியில், இன்று நடைபெற்ற 5 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்திருந்தது. அதிகபட்சமாக ஃபிரைலின்க் 43 ரன்கள்   அடித்தார். நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீடி 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

122 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி,19.3 ஓவர்களில் 5 விக்கெட் மட்டும் இழந்து 122 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. நெதர்லாந்து அணியில், விக்ரம்ஜித் சிங் 39 ரன்களும், மேக்ஸ் ஓ’டௌட் 35 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்