#T20 World Cup 2022: நெதர்லாந்துக்கு எதிராக நமீபியா அணி, 121 ரன்கள் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பை தொடரின் 5 ஆவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நமீபியா, 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 5ஆவது தகுதிச்சுற்று போட்டியில், நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.

இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ஃபிரைலின்க் 43 ரன்கள்   அடித்துள்ளார்.

நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீடி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் நமீபியா அணி 122 ரன்கள் வெற்றி இலக்காக நெதர்லாந்து அணிக்கு நிர்ணயித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்