பருவமழை : அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள  நிலையில்,அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; மேட்டூரில் இருந்து 1.05 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூரிலிருந்து வரும் நீரில் பவானி, அமராவதி,நொய்யல் ஆறுகளின் நீரும் சேருவதால் முக்கொம்புக்கு 2.17 லட்சம் கன அடி நீர்வரத்து இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்