அதிமுக 51வது ஆண்டு.! எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை.!
அதிமுக 51வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அக்டோபர் 17, 1972இல் தொடங்கிய அதிமுக கட்சி தற்போது 50 ஆண்டை நிறைவு செய்து 51வது ஆண்டில் அடியெடுத்துள்ளது.
இதனை அதிமுக சார்பில் கொண்டாடி வருகின்றனர். அதன் படி, அதிமுக தலைமை செயலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
முன்னதாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவை முதல் நாள் கூட்டத்தொடரில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.