#T20WorldCup2022: ஐசிசி உலகக்கோப்பை திருவிழா தொடங்கியது, இன்று இரண்டு போட்டிகள்.!

Default Image

ஐசிசி யின் எட்டாவது டி-20 உலகக்கோப்பை திருவிழா ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது .

16 அணிகள் பங்கேற்கும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. நவம்பர் 13 வரை நடைபெறும் இந்த டி-20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், ஹோபர்ட், சிட்னி, பெர்த், பிரிஸ்பேன், மற்றும் அடிலெய்டு நகரங்களில் நடைபெற இருக்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ஐசிசி டி-20 தரவரிசையின் படி முதல் எட்டு இடங்களைப்பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 க்கு தகுதி பெறுகின்றன. மீதமுள்ள 4 அணிகள் தகுதிச்சுற்று போட்டிகளின் அடிப்படையில் தேர்வாகின்றன. குரூப் A வில் நெதர்லாந்து, இலங்கை, யூஏஇ(UAE), மற்றும் நமீபியா ஆகிய 4 அணிகளும், குரூப் B வில் அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 4 அணிகளும் இடம்பெற்றிருக்கின்றன. மற்றும் குரூப் 1ல் இங்கிலாந்து, நியூசிலாந்து,ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும், குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

தகுதி சுற்று போட்டிகள் அக்-16 முதல் அக்-21  வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-12க்கு தகுதி பெறுகின்றன. சூப்பர்-12 போட்டிகள் அக்-22 இல் தொடங்குகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து அக்-23 இல் விளையாடுகிறது. இந்த நிலையில் உலககோப்பைத்தொடரின் முதல் நாளில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதுகின்றன இந்த போட்டி 9:30 மணிக்கும், இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன இந்த போட்டி 1:30 மணிக்கும் நடைபெறுகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்