இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்..!
இன்று மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும்.
வரும் 17ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் 17ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என தகவல் கூறப்படுகிறது.