காங்கிரஸ் பாஜகவினர் பேசியதாக வெளியிட்ட தொலைபேசி உரையாடல் போலியானது! காங்கிரஸ் எம்.எல்.ஏ பகீர் தகவல்!

Default Image

பாஜகவினர் கர்நாடகாவில் தங்கள் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பேரம் பேசுவதாக கூறிய காங்கிரஸ் கட்சியினர், சில தொலைபேசி உரையாடல் ஆடியோ ஆதாரங்களை ஊடகங்களில் வெளியிட்டனர், இந்த ஆடியோ ஆதாரம் போலியானது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தங்கள் எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்திருந்த நிலையில்,

இதனைத் தொடர்ந்து, 104 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜகவினர் பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அணி மாறி ஓட்டளிக்க தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கு 100 கோடி ரூபாயும், அமைச்சர் பதவி தருவதாகக் கூறி பாஜகவினர் பேரம் பேசுவதாக காங்கிரஸ் – ம.ஜ.தவினர் குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்த மே-19 அன்று, பாஜவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும், எம்.எல்.ஏக்களின் குடும்பத்தினரை மிரட்டியதாகவும் கூறி ஆடியோ ஆதாரங்கள் மூன்றை ஊடகங்களுக்கு அளித்தது காங்கிரஸ். இந்த ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், தங்கள் கட்சியினர் வெளியிட்ட ஆடியோ போலியானது என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பார் கூறியுள்ளது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்ட ஆடியோ ஆதாரம் ஒன்றில், ஹெப்பாரின் மனைவியிடம் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவும் அவருக்கு நெருக்கமானவரான பி.ஜே.புட்டுஸ்வாமியும், தங்கள் கட்சிக்கு ஆதரவு அளித்தால் உங்கள் கணவருக்கு அமைச்சர் பதவியும், பணமும் தருவதாக பேசுவது போல் இருந்தது.

இது தொடர்பாக எம்.எல்.ஏ ஹெப்பார் தனது பேஸ்புக் பக்கத்தில், அந்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளதோடு தனது மனைவிக்கு அவ்வாறான எந்த தொலைபேசி அழைப்பும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

எம்.எல்.ஏவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வி.எஸ். உக்ரப்பா, தங்கள் கட்சி வெளியிட்ட தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் உண்மையானது, ஹெப்பாரின் மனைவியின் குரல் போலியாக இருக்கலாம் ஆனால் விஜயேந்திரா மற்றும் புட்டுஸ்வாமியின் குரல்கள் உண்மையானது, அவர்களுக்கு தைரியம் இருந்தால் தடய அறிவியல் சோதனைக்கு அவர்கள் உட்படட்டும் என்றார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹரி பிரசாத் கூறும்போது, காங்கிரஸ் எப்போதும் உண்மை மீது நம்பிக்கை கொண்ட கட்சியாகும், எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ ஹெப்பார் போலி என உறுதியுடன் கூறியதை வரவேற்பதாகவும், அவர் பாஜகவினர் போல அல்ல என்றும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்