தமிழ்நாட்டு இளைஞர் படை தன் திறமையால் தரணியை ஆளட்டும்! – முதல்வர் ட்வீட்
அனைவருக்கும் உயர்கல்வி – தகுதிக்கேற்ற வேலை என்பதே நம் இலக்கு என முதல்வர் ட்வீட்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ் மண்ணில் பிறந்து, தன் அறிவாற்றலால் இந்தியக் குடியரசின் தலைவராக உயர்ந்த அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், தொழிலாளர் நலத்துறை சார்பிலான தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை வழங்கினேன்!
அனைவருக்கும் உயர்கல்வி – தகுதிக்கேற்ற வேலை என்பதே நம் இலக்கு! அந்த இலக்கை அடையவே ஒருபுறம் முதலீடுகளை ஈர்த்து – மறுபுறம் இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டு இளைஞர் படை தன் திறமையால் தரணியை ஆளட்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் உயர்கல்வி – தகுதிக்கேற்ற வேலை என்பதே நம் இலக்கு!
அந்த இலக்கை அடையவே ஒருபுறம் முதலீடுகளை ஈர்த்து – மறுபுறம் இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டு இளைஞர் படை தன் திறமையால் தரணியை ஆளட்டும்! 2/2 pic.twitter.com/kVfZ8zCE1e
— M.K.Stalin (@mkstalin) October 15, 2022