இந்த வருடமும் சென்னை மக்கள் படகு வாங்கி வைத்து கொள்ளுங்கள்.! பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்.!
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை கூறுகின்றனர். என்னை பொறுத்தவரையில் இந்த வருடமும் சென்னை மக்கள் படகு வாங்கி வைத்து கொள்ளவேண்டும் என நினைக்கிறன். – என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். அப்போது பேசுகையில், பட்டினி குறியீட்டில் இந்தியா 107வது இடம் பிடித்தது பற்றி கேட்கப்பட்டது.
அது பற்றி கூறுகையில், அந்த சர்வே பற்றி தெரியாது. IMF தரவுகளின் படி இந்தியாவின் பசி பட்டினி சதவீதம் 1 சதவீதத்திற்கும் கிழே தான் இருக்கிறது. சில சர்வே அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும். என தெரிவித்தார்.
மேலும், ‘ கொரோனா காலத்தில் மத்திய அரசு 80 கோடி ஏழை மக்களுக்கு உதவியாக 5 கிலோ அரிசி உணவு பொருட்களை கொடுத்து வருகிறது. கடந்த 2 வருடமாக இதனை மத்திய அரசு செய்து வருகிறது. என தெரிவித்தார்.
அடுத்ததாக, சென்னை மழைநீர் வடிகால் பற்றி கூறுகையில், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை கூறுகின்றனர். சிலர் முடிய ஒரு வருடம் ஆகும் என்கிறார்கள். சிலர் 40 சதவீதம் முடிந்தது என்கிறார்கள். திமுக ஆட்சி இதில் தடுமாறி வருகிறது.
என்னை பொறுத்தவரையில் இந்த வருடமும் சென்னை மக்கள் படகு வாங்கி வைத்து கொள்ளவேண்டும் என நினைக்கிறன். என்று சென்னை வடிகால் அமைப்பு குறித்து அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.
மேலும் பேசுகையில், ‘ திமுக அரசு ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் அதிமுக ஆட்சியை குறை கூறி இருக்க வேண்டாம்.
மத்திய அரசு கொடுத்த பணத்தை வைத்து திட்டத்தை செயல்படுத்துங்கள் என பேசினார்.
அடுத்ததாக, பரந்தூர் விமான நிலையம் பற்றி பேசுகையில், சென்னைக்கு இரண்டாவது விமானம் வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. ஆனால் அதனை செயல்படுத்த கொண்டுபோன விதம் தான் திமுகவின் தவறு. மக்களிடம் பேசி தான் இடத்தை முடிவு செய்ய வேண்டும். இவர்கள் முதலியேயே இடத்தை முடிவு செய்ததால் தான் இந்த பிரச்சனை எழுந்துள்ளது ‘ என தனது குற்றசாட்டுகளை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.