மக்கள் இல்லாத திட்டம் வெற்றி அடையாது – உயர்நீதிமன்ற கிளை
கிராமங்களுக்கு எது சிறந்தது என்பது அந்தந்த கிராம மக்களுக்கு தெரியும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை கருத்து.
தேனி லட்சுமிபுரத்தில் உக்கடை வாய்க்காலில் இருந்து கைலாசநாதர் சாலையின் குறுக்கே பாலம் கட்ட உத்தரவிட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், எந்த ஒரு திடமாக இருந்தாலும் அந்த பகுதி மக்களை இணைக்கவில்லை என்றால் அது வெற்றி அடையாது.
தாங்களே சிறந்த அறிவுஞானம் கொண்டவர்கள் என எண்ணி எந்த ஒரு திட்டத்தையும் விவசாயிகளிடம் அதிகாரிகள் திணிக்க முடியாது. கிராமங்களுக்கு எது சிறந்தது என்பது அந்தந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு நன்றாக தெரியும். எனவே, எந்த திடமாக இருந்தாலும் அந்த பகுதி மக்களை இணைக்காமல் அறிவித்தல் நிச்சயம் அது வெற்றி அடையாது. தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும் வரை பெரியகுளம் லட்சுமிபுரத்தில் பாலம் கட்டும் பணியை நிறுத்திவைக்க உத்தரவிட்டனர்.