‘வல்லரசு இந்தியா’ கனவு நிறைவேற ஒற்றுமையாய் உழைத்திடுவோம் – ஓபிஎஸ்
‘வல்லரசு இந்தியா’ கனவு நிறைவேற ஒற்றுமையாய் உழைத்திடுவோம் என உறுதியேற்போம் என ஓபிஎஸ் ட்வீட்.
இன்று ஏபிஜே அப்துல்கலாமின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது பிறப்பு, ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற தன்னுடைய பொன்மொழிக்கு தானே எடுத்துக்காட்டாக விளங்கி, வளமான இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர்.
வாழ்வில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞர்களும் சரியான வழிகாட்டியாக விளங்கியவருமான, பல்துறை வித்தகர், பாரத ரத்னா திரு.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரது ‘வல்லரசு இந்தியா’ கனவு நிறைவேற ஒற்றுமையாய் உழைத்திடுவோம் என உறுதியேற்போம்!’ என பதிவிட்டுள்ளார்.
பல்துறை வித்தகர், பாரத ரத்னா திரு.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரது ‘வல்லரசு இந்தியா’ கனவு நிறைவேற ஒற்றுமையாய் உழைத்திடுவோம் என உறுதியேற்போம்!
— O Panneerselvam (@OfficeOfOPS) October 15, 2022