இவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – வி.கே.சசிகலா
தலைவர்களின் திருவுருவ சிலைகள் சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது என வி.கே.சசிகலா ட்வீட்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு வி.கே.சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்தியிருப்பது வெட்கக்கேடான செயல், இது மிகவும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் சமீப காலமாக, தலைவர்களின் திருவுருவ சிலைகள் சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. பொது அமைதியை சீரழிக்கும் இது போன்ற செயல்கள் நடைபெறாத வகையில் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இந்த இழி செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
இந்த இழி செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.(3/3)
— V K Sasikala (@AmmavinVazhi) October 14, 2022