தயவு செய்து சதீஷை உடனே ரயிலில் தள்ளி தண்டிக்கும் படி கேட்டு கொள்கிறேன்.! – விஜய் ஆண்டனி ஆதங்கம்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவியை நேற்று சென்னை பரங்கிமலை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார்.
மாணவியின் தந்தை மாணிக்கம் மகள் இறந்த துக்கத்தில் இருந்த நிலையில், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவரும் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பலரும் தங்களுடைய வருத்தத்தையும் , ஆதங்கத்தையும் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது ட்வீட்டர் பக்கத்தில் தன்னுடைய ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.
இதுக்கு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.
சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்???? pic.twitter.com/b8h5CPb4hg
— vijayantony (@vijayantony) October 14, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)