மோடி, அமித்ஷாவை போல ராஜீவ் காந்தி கூறியதில்லை.! காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி.!
காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இந்தி மொழி திணிப்பை ஆதரித்தது கிடையாது. என காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் சந்திப்பில் பேசுகையில், ‘ ஹிந்தி மொழியை கட்டாயம் என பாஜக அரசு கூற வில்லை. அப்படி கூறினால், தமிழக பாஜகவே எதிர்க்கும். காங்கிரஸ் ஆட்சியில் தான் ஹிந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. ‘ என காங்கிரசை குற்றம் சாட்டி இருந்தார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் கூறியுள்ளார். அவர் குறிப்பிடுகையில், ‘ காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இந்தி மொழி திணிப்பை ஆதரித்தது கிடையாது. ‘ என பேசினார்.
மேலும் குறிப்பிடுகையில், ‘ பிரதமர் மோடி, அமித்ஷா அனைத்து இடங்களிலும் இந்தி இருக்கவேண்டும் கூறுவது பல, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியதில்லை. பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றனர்.’ என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி.