விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய முடிவு ..!

Default Image

விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 24 மணி நேரத்தில் ரத்து செய்தால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வர சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து தொடர்பான புதிய விதிமுறைகள் குறித்த வரைவு பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, விமான பயணச்சீட்டு ரத்துக்கான கட்டணம், அடிப்படை கட்டணம் மற்றும் எரிபொருள் கட்டணத்தை விட கூடுதலாக இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான நிறுவனத்தின் தவறுகாரணமாக தாமதம் அல்லது விமானம் ரத்து நேர்ந்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்த விமான டிக்கெட்டை 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யும் பட்சத்தில் பயண நாளுக்கு மேலும் 4 நாட்கள் அவகாசம் இருந்தால் முழு கட்டணமும் திரும்ப வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்