விமானத்தில் வைத்து காதலை வெளிப்படுத்திய காதலன் ..!
விமானத்தில் வைத்து காதலை வெளிப்படுத்திய காதலன் ..!
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், விமானத்தில் வைத்து பயணி ஒருவர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தூரில் இருந்து கோவா செல்வதற்காக அந்த இளம்பெண் இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது விமானத்திற்குள் ஏறிய நரேந்திர அனந்தானி என்ற பயணி, இண்டர்காம் வாயிலாக அந்தப் பெண்ணின் பெயரைக் கூறி அழைத்தார். இளம்பெண் அவரை நோக்கி வந்ததும், அவர் முன் மண்டியிட்ட அனந்தானி தம்மை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்டார். அதற்கு அந்த இளம்பெண்ணும் சம்மதம் என்று கூறியதை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இருவரும் ஏற்கெனவே காதலித்து வந்ததாகவும், காதலிக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இவ்வாறு செய்ததும் தெரியவந்தது.
https://youtu.be/Idc2mJWHcR8