பொலிவை இழந்து வருகிறது தாஜ்மஹால்..!
சுற்றுச்சூழல் மாசு காரணமாக தாஜ்மஹால் அதன் பொலிவை இழந்து வருகிறது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காண, பல்வேறு நாட்டினர் உள்பட தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இதனால், ஆக்ராவில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
வாகனங்களின் புகை மற்றும் குப்பைகள் எரிப்பால் ஏற்படும் காற்று மாசு, யமுனா நதிக்கரையில் கொட்டப்படும் கழிவுகள், ஆகியவற்றால் தாஜ்மஹாலின் அழகு பாதித்துள்ளது.
பளிங்கு கற்களால் மின்னும் தாஜ்மாஹால் மாசுபடிந்து மஞ்சள், பச்சை நிறமாக மாறி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.