#BREAKING: நீட் வழக்கு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை!
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால், நீட் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
நீட் வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. கடந்த மாதம் 27ம் தேதி இந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்தது என உச்ச நீதிமன்றம் மனுவை ஏற்றது.
இந்த நிலையில், இன்று விசாரணையின்போது, நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு அரசின் NEET விலக்கு மசோதா குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால் அதன் மீது முடிவு தெரியும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்ததை அடுத்து ஒத்திவைக்கப்பட்டது.