விஜய் சேதுபதி – வடிவேலு ஒரே படத்தில்… படம் முழுக்க காமெடி.! ரசிகர் வயிற்றை பதம் பார்க்கபோகும் காமெடி கூட்டணி.!
வில்லன், ஹீரோ என இரண்டு கதாபாத்திரங்களில் கலக்கி வரும் விஜய் சேதுபதி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூதுகவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட காமெடி படங்களை போல மீண்டும் ஒரு காமெடி படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
விஜய் சேதுபதி நடிக்கவுள்ள அந்த காமெடி திரைப்படத்தை “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம்” என்ற படத்தை இயக்கிய ஆறுமுககுமார் இயக்கவுள்ளாராம். இந்த படம் குறித்த சுவாரசியமான முக்கிய தகவல் என்னவென்றால், வகைபுயல் வடிவேலுவும் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.
முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்படவுள்ளதாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே படத்தில் வடிவேலுவும், விஜய்சேதுபதியும் இணையவுள்ளதால் ரசிகர்கள் படத்தின் அப்டேட்டுக்காக எதிர்பார்த்து காத்துள்ளனர்.
மேலும் வடிவேலு தற்போது இயக்குனர் சந்திரமுகி 2-வது பக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தற்போது தமிழில் விடுதலை, பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.