இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வ பெருந்தகை
மழை குறவர் மக்களுக்கு மலைவாழ் சாதி சான்றிதழ் வழங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை வலியுறுத்தல்.
காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராடியுள்ளார்.
மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழுக்காக பலமுறை அலைந்தும் பயனில்லை. மனம் வெறுத்துப்போன வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை கூறுகையில், மழை குறவர் மக்களுக்கு மலைவாழ் சாதி சான்றிதழ் வழங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்திற்கு அரசு நிதி வழங்க வேண்டும்.அவரது 3 பிள்ளைகளுக்கும் கல்விக்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். மலைகுறவர் மக்களுக்கு சாதி சான்றிதழ் கிடைப்பதில், மாவட்ட நிர்வாகத்தில் சில சிக்கல்கள் உள்ளது; அதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.