#BREAKING: பணமதிப்பிழப்பு நடவடிக்கை – மத்திய அரசுக்கு உத்தரவு!

Default Image

பணமதிப்பிழப்பு குறித்த முடிவு எடுக்கப்பட்டது தொடர்பாக விரிவான பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் விரிவான பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்ய செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்றும் பண மதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய வழிமுறைகள், சரியானதா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. தனிநபர் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை நிர்வாக ரீதியில் சரி செய்து கொள்ள வேண்டும் மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி 500 மற்றும் 1000 நோட்டுகளின் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்படி நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் பிறகு மத்திய அரசு முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்