எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு – ஐகோர்ட்டில் இன்று விசாரணை!
தன் மீதான வழக்குகளை ரத்துசெய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை.
அதிமுக ஆட்சியின்போது மாநகராட்சி டெண்டர்கள் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எஸ்பி வேலுமணி மீது தமிழக லஞ்சஒழிப்புத்துறை 2 வழக்குகளை பதிவு செய்திருந்தது. கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களை உறவினர்களுக்கு வழங்கி ரூ.800 கோடி முறைகேடு செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
டெண்டர் முறைகேடுகள் தொடர்பான எஃப்.ஐ.ஆர்.-களை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன்படி, கடந்த விசாரணையில் வழக்கை அக்.12ம் தேதிக்கு இன்று ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேட்டு வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.