முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் உடல்நலக்குறைவால் காலமானார்

Default Image

முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 2001 மற்றும் 2006 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இருமுறை சட்டமன்ற  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோவை தங்கம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் த.மா.க விலிருந்து விலகி 2021 இல் திமுகவில் இணைந்தார்.

73 வயதான கோவை தங்கம் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.இவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்