8 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் விஜய் -அஜித்… களைகட்டப்போகும் பொங்கல் திருவிழா..!

Default Image

நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். அந்த அளவிற்கு அவர்களது ரசிகர்கள் ஆட்டம், பட்டம் என படத்தை கொண்டாடி விடுவார்கள். இப்படி இருக்கையில், இவர்கள் இவர்களின் திரைப்படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் தமிழ்நாடே எப்படி கொண்டாடும் என்பதை பற்றி சொல்லியா தெரியவேண்டும்..?

vijay and ajith

கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு அஜித் நடித்த “வீரம்”  திரைப்படமும், விஜய் நடித்த “ஜில்லா” திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானது.

இதையும் படியுங்களேன்- அஜித் என்னோட புள்ள.. அவர மாதிரி குணம் யாருக்குமே இல்ல..பிரபல நடிகர் புகழாரம்.!

veeram vs jilla

அதன்பிறகு இவர்கள் நடித்த எந்த திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகவில்லை, இத்தனை தொடர்ந்து கிட்டத்தட்ட 8-ஆண்டுகளுக்கு பிறகு அஜித், விஜய் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக சூடான சூப்பர் தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

varisu vs thunivu

அதன்படி, அஜித் நடித்து வரும் “துணிவு”  திரைப்படமும், விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படமும் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் தினதன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் “வாரிசு” படத்தின் ரிலீஸ் தேதி முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். விரைவில் “துணிவு”படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்