‘வாழும் லெஜண்ட்’ – பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்…!
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘வாழும் லெஜண்ட் & இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நட்சத்திரம் அமிதாப் பச்சன் இன்று 80 வயதை எட்டியுள்ளார். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்கள் வர்த்தக முத்திரையான கலைப் பண்புகள் எதிர்காலத்திலும் இந்தியத் திரையுலகில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி இன்னும் பல தசாப்தங்களுக்கு பார்வையாளர்களைக் கவரட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
Wishing a very happy birthday to the living legend & the most iconic star of Indian Cinema @SrBachchan who is turning 80 today.
May your trademark artistic characteristics continue to influence the Indian Cinema in future as well and enthrall the audience for many more decades.
— M.K.Stalin (@mkstalin) October 11, 2022