#BREAKING: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2022-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை 3 பேருக்கு அறிவித்தது தேர்வுக்குழு.

கடந்த ஒரு வாரமாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல் மற்றும் மருத்துவ உள்ளிட்ட துறைகளுக்கு இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று  2022-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த பென் பெர்னான்கே, டக்ளஸ் டயமண்ட் மற்றும் பிலிப் டிப்விக் ஆகிய 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

மேலும், வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த ஆராய்ச்சிக்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கபடுகிறது. வங்கி சரிவைத் தவிர்ப்பது ஏன் இன்றியமையாதது என்பது அவர்களின் ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2022 ஆம் ஆண்டு ஆல்பிரட் நோபலின் நினைவாக பொருளாதார அறிவியலுக்கான Sveriges Riksbank பரிசை வழங்க ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் முடிவு செய்துள்ளது.

Leave a Comment