#BREAKING: உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்!

Default Image

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம், குருகிராம் மருத்துவமானையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, டெல்லி அருகே மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அக்.2ம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். ஐசியூவில் இருக்கும் முலாயம் சிங் யாதவ்-வின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்தது. இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் (82) காலமானார். குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த வாரம் முதல் சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ் காலமானார் என அகிலேஷ் யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேதாஜி என்று உத்தரபிரதேச மக்களால் அழைக்கப்பட்டவர் முலாயம் சிங் யாதவ். ராம் மனோகர் லோகியாவால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் நுழைந்தவர். நெருக்கடி நிலை காலத்தில் 19 மாதம் சிறையில் இருந்தார். உத்தரபிரதேச முதலமைச்சராக 3 முறை பதவி வகித்த இவர், கடைசியாக 2003 முதல் 2007 வரை காலகட்டத்தில் 3வது முறையாக உத்தரபிரதேச முதலமைச்சர் பதவி வகித்தார்.  7 முறை எம்பியாகவும், 10 முறை எம்எல்ஏவாகவும் இருந்தவர். மேலும், மத்திய அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்