ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன் – கே.எஸ்.அழகிரி
ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன் என கே.எஸ்.அழகிரி ட்வீட்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி நமது ஆன்மிகத்தின் ஆதாரம் திருக்குறள் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஆளுநரின் கருத்து குறித்து கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ஆளுநர் அவர்கள் ஒவ்வொரு குறளையும் படித்து அதனுடைய பொருளை புரிந்து கொள்ள முயற்ச்சித்து வருவது வரவேற்க்கத்தக்கது. ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆன்மிகம் என்பது மதத்தில் இருந்து அப்பாற்பட்டது. மதம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவை, குறிப்பிட்ட இறை வழிபாட்டை, குறிப்பிட்ட கடவுளை அமைப்பு ரீதியாக பின்பற்றுவதும், அந்த நோக்கங்களுக்காக எந்த கடுமையான செயலை செய்வதற்கும் மதம் தூண்டு கோலாக அமையும். உதாரணங்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு என தெரிவித்துள்ளார்.
1000 ஆண்டுக்கு மேல் நடைபெற்ற சிலுவை போர்கள், மதமாற்றங்கள், வைணவம், சைவத்திற்கு நடந்த உயிரிழப்புகள், சமயத்தை அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், யூதர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் நடைபெறுகிற வன்மம் நிறைந்த போராட்டங்கள் அனைத்திற்கும் பின்புலமாக இருப்பது மத அமைப்புகளே.
— K.S.ALAGIRI (@KS_Alagiri) October 8, 2022