நாங்கள் ஏன் புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம்.? ராகுல் காந்தி விளக்கம்.!
புதிய கல்வி கொள்கையானது இந்திய வரலாற்றை திரிக்கிறது. அதனால் தான் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். – என தனது எதிர்ப்பை அண்மையில் பதிவு செய்துள்ளார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 30நாளை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
தற்போது கர்நாடகாவில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இடையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது புதிய கல்வி கொள்கை பற்றி கூறுகையில், ‘ புதிய கல்விக் கொள்கை நமது நாட்டின் அடிப்படை பண்புகளை பாதிக்கிறது.’ என்று தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், ‘ புதிய கல்வி கொள்கையானது இந்திய வரலாற்றை திரிக்கிறது. அதனால் தான் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தற்போது நடைமுறையில் இருக்கும் கல்வி முறைதான் நமக்கு தேவை.’ என புதிய கல்வி கொள்கை மீதான தனது எதிர்ப்பை ராகுல் காந்தி பதிவு செய்துள்ளார்.