உலகை 8 மாதங்களில் படகில் சுற்றி வந்த இந்திய கடற்படை வீராங்கனைகள் 6 பேரை வரவேற்ற நிர்மலா சீத்தாராமன்!
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ,8 மாதங்களில் படகில் உலகைச் சுற்றி வந்த இந்திய கடற்படை வீராங்கனைகள் 6 பேரை கோவாவில் வரவேற்றார்.
நேவிகா சாகர் பரிக்ரமா என்று பெயரிடப்பட்ட இந்த பயணத் திட்டத்தின் அடிப்படையில் உள்நாட்டிலேயே தயாரான தாரினி எனும் சிறிய ரக படகில் உலகைச் சுற்றி வரும் பயணம் கடந்த ஆண்டு செப்டம்பரில் கோவாவிலிருந்து தொடங்கியது. டெப்டினன்ட் கமாண்டர் வார்டிகா ஜோஷி தலைமையில் 6 பெண் அதிகாரிகள் 252 நாட்களில் 21 ஆயிரத்து 600 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து வந்துள்ளனர்.
3 பெருங்கடல்களையும், 4 கண்டங்களையும் இக்குழு கடந்து வந்துள்ளது. இந்திய பெண்களின் திறனை உலகறியச் செய்யும் நோக்குடன் இந்த பயணம் நிகழ்த்தப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.