திருக்குறள் குறித்த ஆழ்ந்த ஞானம் ஆளுநருக்கு கிடையாது – வைகோ
இந்துத்துவாவை தமிழ்நாட்டில் எப்படியாவது திணித்து விட வேண்டும் என துடிக்கும் சங்பரிவாரர்களுக்கு ஆளுநர் துணை போகிறார் என வைகோ பேச்சு.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், 14 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை தெரிவித்துள்ளார்.
மேலும், திருக்குறள் குறித்து ஆளுநர் தவறான தகவல்களை கூறி வருகிறார். ஜி.யூ.போப்பு திருக்குறளை சரியாக மொழிபெயர்த்திருக்கிறார்; இங்கு இருக்கிற கூட்டம் திட்டமிட்டு பேசி வருகின்றனர் அதற்கு ஆளுநர் துணை போவது மிகவும் துரதிஷ்டமான செயலாகும்.
திருக்குறள் குறித்த ஆழ்ந்த ஞானம் ஆளுநருக்கு கிடையாது. அவர் மீண்டும் மீண்டும் தவறான கருத்துக்களை கூறி வருகிறார். இந்துத்துவாவை தமிழ்நாட்டில் எப்படியாவது திணித்து விட வேண்டும் என துடிக்கும் சங்பரிவாரர்களுக்கு ஆளுநர் துணை போகிறார் என தெரிவித்துள்ளார்.