இந்து சமய அறநிலையத்துறை பெயரை மாற்ற வேண்டும் – திருமாவளவன்

Default Image

இந்து சமய அறநிலைய துறையை சைவ சமய அறநிலை துறை, வைணவ சமய அறநிலைத்துறை என்று பெயர் மாற்ற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல். 

கடந்த  சில நாட்களுக்கு முன்,  வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில், ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிக்க முயற்சிகின்றனர். ஆனால் ராஜராஜ சோழன் சைவர் தான். அவர் இந்து அல்ல  தெரிவித்திருந்தார்.

இயக்குனர் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவாக, இந்து என்ற பெயர் ஆங்கிலேயர் சூட்டியது என சீமான், திருமாவளவன், நடிகர் கமலஹாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்து சமய அறநிலைய துறையை சைவ சமய அறநிலை துறை, வைணவ சமய அறநிலைத்துறை என்றும் பெயர் மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இவ்விரு சமயங்களையும் இந்து சமயம் என்று ஆக்கியதன் மூலம் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள் நீர்த்துப்போகின்றன. அதாவது, சிவனியம், மாலியம் ஆகியவற்றை வைதிக மத கோட்பாடான சனாதனம் விழுங்கிவிட்டு மேலாதிக்கம் செய்கிறது. சனாதனம் வர்ணாஸ்ரமம் மனுதர்மம் என்பன பார்ப்பனியமே என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்