நீண்ட நாட்களாக காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த திருடர்களின் தலைவன் பிடிபட்டார்!

Default Image

நீண்ட நாட்களாக  தென் மாநில காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் திருவாரூர் முருகன் தனது கூட்டாளிகளுடன் சென்னையில் தொடர் கொள்ளையை அரங்கேற்றி காவல் துறையினரை அதிர வைத்துள்ளான். அவனது கூட்டாளிகள் 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் சுமார் நூறு வழக்குகளில் தொடர்புடையவன் கொள்ளையன் முருகன். சொந்த ஊரை அடைமொழியாக்கி திருவாரூர் முருகன் என அழைக்கப்பட்டும் இந்த திருடன் தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் “Most wanted accused”. 2014-ம் ஆண்டில் இருந்து 2015 வரை ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள வங்கிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு சைபராபாத் காவல் துறையினரை அதிரவைத்த முருகனும் அவனது கூட்டாளியும் தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.

சில மாதங்களில் ஜாமீனில் வந்த முருகன் தலைமறைவாக இருந்த நிலையில், சென்னை அண்ணா நகரில் முகாமிட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு போலீசாரை அதிரவைத்துள்ளான்.

கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இந்தாண்டு மார்ச் வரை அண்ணா நகர், திருமங்கலம் பகுதியில் 17 வீடுகளில் கொள்ளை நடந்தது. அத்தனை வீடுகளிலும் ஒரே கும்பல் தான் கைவரிசை காட்டியிருக்கிறது என்பதை அவர்களின் கைரேகை காட்டிக் கொடுத்தது. இந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கொள்ளையர்கள் மணிகண்டன், கோபால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களை பிடித்த பிறகு தான் திருவாரூர் முருகன் தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

இந்த பகுதியில் நடந்த 17 கொள்ளை சம்பத்தில் ஒரு வீட்டில் கூட சிசிடிவி கேமராக்கள் இல்லை. கொள்ளையடிப்பதற்கு முன்பு திருவாரூர் முருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் வாடகை கார் ஒன்றில் சென்று போலீஸ்காரர்களை போல ஒரே பகுதியை 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்காணிப்பார்கள். தொடர்ந்து கதவு பூட்டியிருக்கும் வீட்டை குறித்து வைத்துகொள்வார்கள். மாலையில் அந்த வீட்டின் நுழைவு கேட்டில் காகிதம் ஒன்றை மடித்து வைத்து விட்டு, இரவு 10 மணிக்கு மேல் வந்து பார்க்கும் போது அந்த காகிதம் அப்படியே இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் வெளியூரில் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு நள்ளிரவில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவார்கள்.

இந்த நிலையில் இந்த கொள்ளை கும்பலுக்கு தரகராக செயல்பட்டு வந்த பாண்டிச்சேரியை சேர்ந்த ரகுராமை கோயம்பேட்டில் வைத்து கைது செய்துள்ளனர். இந்த ரகுராம் தான் திருவாரூர் முருகன் கும்பல் கொள்ளையடிக்கும் தங்க, வெள்ளி பொருட்களை வாங்கி விற்று வந்துள்ளான். இவனிடம் இருந்து 12 கிலோ வெள்ளி கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநில காவல் துறையினருக்கு பெரும் சவாலாக விளங்கும் திருட்டு கும்பலின் தலைவனான திருவாரூர் முருகனை பிடிக்க சென்னை காவல் துறையும் தனிப்படை அமைத்து களமிறங்கியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்