நாளை பெங்களுருவில் தொடங்குகிறது ப்ரோ கபடி லீக் சீசன்-9!

Default Image

9 ஆவது சீசன் ப்ரோ கபடி லீக் (PKL) கபடி போட்டிகள், நாளை (அக்-7) பெங்களுருவில் ஸ்ரீ கண்டீரவா உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்குகிறது.

ஐபிஎல் போட்டிகளை போன்றே நடத்தப்படும் பிகேஎல் (PKL) எனும் கபடி போட்டிகள் வருடா வருடம் நடைபெற்றுவருகிறது. ஆண்டுக்கு ஆண்டு கபடி போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றனர். கிரிக்கெட் போன்றே இந்தியாவில் தற்பொழுது மற்ற விளையாட்டுகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அந்த வகையில் கபடி போட்டிக்கென்று ப்ரோ கபடி லீக் (PKL) தொடர்கள் பிரபலமடைந்து வருகின்றன. இந்த ப்ரோ கபடி லீக்கின் 9ஆவது சீசன் நாளை (அக்-7) தொடங்கவிருக்கிறது. கடந்த சீசன் 8 இல் டபாங் டெல்லி அணி சாம்பியன் படம் வென்றிருந்தது.

12 அணிகள் பங்கேற்று விளையாடும் ப்ரோ கபடி லீக் சீசன்-9 நாளை பெங்களுருவில் தொடங்குகிறது. இந்த சீனின் தொடக்கபோட்டியில் கடந்த முறை சாம்பியனான டபாங் டெல்லி மற்றும் யூ மும்பா அணிகள் மோதுகின்றன. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த வருடம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லீக் சுற்று  போட்டிகள் பெங்களூரு, புனே, மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும், இறுதிப் போட்டி நடைபெறும் தேதி இன்னும்  அறிவிக்கப்படவில்லை.

தொடக்க நாளான அக்-7 அன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டபாங் டெல்லி, யூ மும்பாவை எதிர்த்து விளையாடுகிறது. இரண்டாவது போட்டி இரவு 8:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த  போட்டியில் பெங்களூரு புல்ஸ் மற்றும் தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 9:30 மணிக்கு நடைபெறும் மூன்றாவது போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் மற்றும் யூ.பி.யோதாஸ் அணிகள் மோதுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்